
பயபுள்ள காட்னான் சிக்னலு
சிறுக்கிக்கு இர்ந்தது ‘சில்’லுன்னு
பைசா பார்ட்டி டாட்டரு
நைசா தட்டுனான் லெட்டரு
வெர்பல் ப்ரபோஸ்ஸூ ஈவ்னிங்கு
சத்தாய்ப்பு தெனமும் மார்னிங்கு
செருப்பால அடிப்பன்னு திட்டினா
அப்பால ப்ரைட்டாச்சு ‘ரெட்டினா’
வயசோ ரெண்டுக்கும் விடலை
ஓயாம போட்டாங்கோ கடலை
செல்லுக்கு எப்போதும் ‘டாப்-அப்’பு
மெசேஜூம் அப்பப்ப ‘பாப்-அப்’பு
மிஸ்டு காலெல்லாம் கிஸ்டு காலாச்சு
கிஸ்டு அக்கேஸனெல்லாம் -
நெவர் மிஸ்டு அக்கேஸனாச்சு
‘ப்யூர் லவ்’வுன்னு சொன்னாங்கோ கேக்கசொல்ல
தெரு நாய்ங்க சிரிச்சிதுங்க மனசுக்குள்ள
இட்டுகினு போன ஷோவெல்லாம் மேட்டினி
வூட்டு மக்க கெடந்தாங்கோ பட்டினி
ஊரல்லாம் தெர்ஞ்சிது டீலிங்கு
வந்துச்சு சோடிக்குஃபீலிங்கு
அண்ணம்மார் தந்தாங்கோ வார்னிங்கு
…த்தா, வந்துச்சு ஒருதபா டர்னிங்கு
இட்டுகினு வந்தானுவோ பீட்டர
தின்சு தின்சா வுட்டான் மேட்டர
…ய்யால,
மனச கசக்கி போட்டா தூசியா
நம்பர மாத்திகினா ஈஸியா
அவுங்க சோடிபோட இவனாண்ட தாடி & பீடி
தோஸ்துங்க திட்னாங்கோன்னு
பட்டுன்னு யோசிச்சு, சட்டுன்னு கட்டுனான்
‘வாம்மா’ன்னு - மாமா பொண்ண!
மஜா முப்பது நாள் மட்டுமில்லன்னு
புர்ஞ்சிது அதுக்கில்ல எல்லைன்னு
இவுங்க வாழ்க்க போறவிதம் சுகரு!
நமக்கென்னாத்துக்கு நைனாஃபிகரு?
4 comments:
very nice one.
poem can be of so simple and can reflect the reality (natural happening). very nice fun filled article.
all the very best.
…த்தா சூபரு மாமு உன் எதார்த்த கவிதைகள் செமையயிருக்கு
karki combined with Karadi(TR)
velmurugan kavithai paaradi!!!
karki combined with Karadi(TR)
velmurugan kavithai paaradi!!!
Post a Comment