
புரிந்து கொள்ளும் நிலையிலில்லை யாரும்
அறிய வைக்கவும் அவசியமில்லை
படிந்து கொண்டிருக்கின்றன நினைவுகள் -
நமக்கல்லாத நாளையில் புதைய
மீண்டும் சில நினைவுகள் மலரலாம் -
நாளை மறு நாள் புதைவதற்கு
புதைபவை எல்லாம் அழிபவையல்ல -
அவை புராதனச் சின்னங்கள்
புரிதல்கள் அறிந்த உலகில்
அப்புராதனங்கள் ஒரு நாள் வெளிப்படும்
அவை நாமல்லாத உலகாயிருக்கலாம்
காலம் மட்டுமே சாஸ்வதம்
வெளிப்படாத புராதனங்கள்
காலத்தின் கதவுகள் நோக்கியே காத்திருக்கின்றன!
No comments:
Post a Comment